இந்தியத் தேர்தல் ஆணையமானது, 100 ஜனநாயக நாடுகளுடன் இணைந்து ‘தேர்தல் ஒருமைப்பாடு’ மீதான ‘ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டினை’ நடத்துகிறது.
‘ஜனநாயகத்திற்கான உச்சி மாநாட்டின்’ ஒரு பகுதியாக, இந்தியா நாடானது, ‘தேர்தல் ஒருமைப்பாட்டிற்கான ஜனநாயகக் கூட்டமைப்பை’ வழி நடத்த உள்ளது.
அதன் அறிவு, தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை உலகின் பிற ஜனநாயக நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ள உள்ளது.
100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள், குடிமைச் சமூக அமைப்புகள், தனியார் துறை, ஊடகங்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளனர்.