ஜம்மு காஷ்மீரில் மத்தியச் சட்டங்களை ஏற்றுக் கொள்ளும் உத்தரவுக்கு அமைச்சரவை ஒப்புதல்
February 28 , 2020 2000 days 522 0
புதிதாக உருவாக்கப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தில் பொதுப் பட்டியலில் உள்ள அனைத்து 37 மத்தியச் சட்டங்களையும் ஏற்றுக் கொள்வதற்கான உத்தரவை பிறப்பிப்பதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தச் சட்டங்கள் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நடைமுறைக்கு வந்த ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் பிரிவு 96ன் கீழ் மாற்றப்பட இருக்கின்றது.
ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் 96வது பிரிவானது புதிதாக அமைக்கப்பட்ட ஒன்றியப் பிரதேசங்களில் ஒரு வருடத்திற்குள் எந்தவொரு சட்டத்தையும் பயன்படுத்துவதற்கான சட்டங்களை ஏற்றுக் கொள்ள அல்லது மாற்ற மத்திய அரசிற்கு அதிகாரங்களை வழங்குகின்றது.