ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018
February 18 , 2019 2360 days 688 0
16வது மக்களவையின் கடைசிக் கூட்டத் தொடரில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதா, 2018 ஆனது நிறைவேற்றப்பட்டது.
1919 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி அமிர்தசரஸின் ஜாலியன் வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நினைவாக தேசிய நினைவகத்தை அமைப்பதற்காக 1951 ஆம் ஆண்டு ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவகச் சட்டம் ஏற்படுத்தப்பட்டது.
1951 ஆம் ஆண்டு சட்டமானது தேசிய நினைவகத்தை நிர்வகிப்பதற்காக அறக்கட்டளையை ஏற்படுத்தவும் வழி செய்துள்ளது. அந்த அறக்கட்டளையானது பின்வருபவர்களை உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும்.
தலைவர் என்ற பதவியில் பிரதமர்,
இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவர்
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர்
மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்
பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் மற்றும் ஆளுநர்
மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட மூன்று சிறந்த ஆளுகைகள்
2018 திருத்தம்
2018 ஆம் ஆண்டு திருத்த மசோதாவானது அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கும் இந்திய தேசியக் காங்கிரஸின் தலைவரை நீக்குகிறது.
மேலும் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் யாரும் இல்லாத பொழுது மக்களவையில் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவரே அறக்கட்டளையில் உறுப்பினராக இருப்பார் என்றும் தெளிவுபடுத்துகிறது.
1951 ஆம் ஆண்டு சட்டத்தின்படி மத்திய அரசினால் நியமிக்கப்படும் புகழ்பெற்ற 3 நபர்கள் 5 ஆண்டுகள் பதவிக் காலத்தைக் கொண்டிருப்பர். மேலும் அவர்கள் மறுமுறையும் அப்பதவிக்கு நியமிக்கப்படுவதற்குத் தகுதியுடையவர்கள் என்று அச்சட்டம் கூறுகிறது.
மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட 3 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடையும் முன்னரே எந்தவொரு காரணமும் இல்லாமல் அவர்களை மத்திய அரசு நீக்குவதற்கான ஒரு புதிய பிரிவை 2018 ஆம் ஆண்டு மசோதா இணைத்துள்ளது.