இந்தியப் பிரதமர் இராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் உள்ள பத்திரிக்கை வாயிலைக் காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.
பத்திரிக்கை வாயிலானது இராஜஸ்தான் மாநிலத்தின் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் கட்டிடக் கலை பாணியைப் பிரதிபலிக்கும் ஒரு நினைவகமாகும்.
இந்தப் பத்திரிக்கை வாயிலானது ஜெய்ப்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு மார்க்கில் பத்திரிக்கை நாளிதழ் குழுமத்தினால் கட்டப்பட்டுள்ளது.
மேலும் இவர் சம்வாத் உபநிடதம் மற்றும் அக்சார் யாத்திரை ஆகிய 2 புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.
இந்தப் புத்தகங்கள் இராஜஸ்தான் பத்திரிக்கை குழுமத்தின் தலைமையாசிரியர் மற்றும் பத்திரிக்கை நாளிதழ் குழுமத்தின் தலைவரான குவாப் கோத்தாரி அவர்களால் எழுதப் பட்டது.