TNPSC Thervupettagam

டிஜிட்டல் உரிமைகள் குறித்த உச்ச நீதிமன்ற வழக்கு

October 19 , 2026 6 days 76 0
  • இந்திய அரசியலமைப்பின் 21 மற்றும் 19(1)(a) ஆகிய சரத்துகளின் கீழ் இணையத்தை அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்குமான குழந்தைகளின் உரிமையை அவர்களின் அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
  • சரத்து 21 வாழ்வதற்கான உரிமை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதுகாக்கிறது, அதே சமயம் சரத்து 19(1)(a) பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையைப் பாதுகாக்கிறது.
  • இணைய அணுகல் மீதான ஒட்டுமொத்த தடைகள் விகிதாசாரமற்றதாக இருக்கலாம் என்றும், அது குழந்தைகளை பாதுகாப்பற்ற இணைய தளங்களை நோக்கி தள்ளக் கூடும் என்றும் நீதிமன்றம் கவனித்துள்ளது.
  • பெற்றோர் வழிகாட்டுதல், மேற்பார்வை, வயதுக்கு ஏற்ற பாதுகாப்புகள் மற்றும் சமூக ஊடகங்களில் பிரத்யேகமான "குழந்தை முறை" கணக்குகள் ஆகியவை பரிந்துரைக்கப் பட்ட பாதுகாப்புகளில் அடங்கும்.
  • இணையவழி பாதுகாப்பு நடவடிக்கைகள் குழந்தைகளின் டிஜிட்டல் உரிமைகளை மதித்து, 2012 ஆம் ஆண்டு பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தை ஆதரிக்கும் அதே வேளையில், குழந்தைகளை சுரண்டலில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்