TNPSC Thervupettagam

டோர்ஜிலுங் திட்டம் – பூடான்

August 6 , 2025 15 days 61 0
  • பூடானில் 1125 மெகாவாட் (MW) திறன் கொண்ட டோர்ஜிலுங் நீர்மின் நிலையத்தின் கட்டுமானம் ஆனது சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற சில உள்கட்டமைப்புப் பணிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.
  • டாடா பவர் ஆஃப் இந்தியா நிறுவனமானது பூடானின் ட்ரூக் கிரீன் பவர் கார்ப்பரேஷன் (DGPC) நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதோடு இது பன்னாட்டளவில் தூய்மையான ஆற்றலில் ஒரு பெரிய தனியார் துறையின் ஈடுபாட்டினைக் குறிக்கிறது.
  • உலக வங்கியால் நிதியளிக்கப்படுகின்ற இந்தத் திட்டத்திற்கு சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது சுமார் 150 பில்லியன் பூடானிய குல்ட்ரம் (Nu) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இந்தத் திட்டம், மோங்கரில் அமைந்துள்ள ஓர் அணை மற்றும் லுயென்ட்சே மாவட்டத்தில் நீண்டு காணப்படும் ஒரு நீர்த்தேக்கத்துடன் ஆறு விசையாழிகளைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் மணிக்கு 4.5 டெராவாட் (TWh) மின்சாரத்தினை உற்பத்தி செய்யும்.
  • டாடா பவர் மற்றும் DGPC ஆகியவை இணைந்து பூடானில் சூரிய சக்தி மற்றும் பிற முக்கிய நீர்மின் நிலையங்கள் உட்பட 5000 மெகாவாட் அளவிலான தூய்மையான ஆற்றலை உருவாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்