TNPSC Thervupettagam
May 26 , 2026 4 days 78 0
  • ஒரு சிறிய இரட்டை விண்மீன் அமைப்பில் பழுப்பு நிற குள்ள விண்மீன் துணையைக் கொண்ட முதல் உறுதிப்படுத்தப்பட்ட நீல நிற தனித்து விடப்பட்ட விண்மீனை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • வெப்பமான, நீல நிறம் கொண்ட மற்றும் பிரம்மாண்டமான விண்மீன்களான இவை முக்கியமாக கோளத் தொகுப்புகள் போன்ற பழைய விண்மீன் அமைப்புகளில் காணப்படுகின்றன.
  • இந்த விண்மீன்கள் ஒரே வயதுடைய அருகிலுள்ள விண்மீன்களை விட பிரகாசமாகவும் வெப்பமாகவும் தோன்றுவதுடன், எதிர்பார்க்கப்பட்டதை விட புதியதாகவும் காணப் படுகின்றன.
  • இவை வித்தியாசமாக பரிணமிப்பதாலும், சாதாரண விண்மீன் வாழ்க்கைச் சுழற்சியில் மற்ற விண்மீன்களை விட பின்தங்கியிருப்பதாலும் தனித்து விடப்பட்டவை / பின்தங்கியவை என்று அழைக்கப்படுகின்றன.
  • இவை ஒரு துணை விண்மீனிலிருந்து பொருளைப் பெறுவதன் மூலமாகவோ அல்லது பல விண்மீன்களுக்கு இடையேயான தொடர்புகளின் மூலமாகவோ உருவாகின்றன என்று அறிவியலாளர்கள் நம்புகின்றனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்