TNPSC Thervupettagam

தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டம் 2026

October 17 , 2026 5 days 108 0
  • தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையில் 'தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்புத் திட்டம் 2026' ஐத் தொடங்கி வைத்தார்.
  • இந்தியாவில் ஒரு முன்னணி குறைக்கடத்தி மற்றும் மேம்பட்ட மின்னணுவியல் உற்பத்தி மையமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கும் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மத்திய அரசின் குறைக்கடத்தி திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் தமிழ்நாட்டின் குறைக்கடத்தி சூழலமைப்பிற்கு முக்கியமான பிற தகுதியான திட்டங்களுக்கான ஆதரவு என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2026 ஆம் ஆண்டு ஜூலை 15 அன்று அங்கீகரிக்கப்பட்ட மத்திய அரசின் செமிகான் இந்தியா திட்டம் 2.0 க்கு (Semicon India Programme 2.0) துணையாக இருக்கும்.
  • செமிகான் இந்தியா 2.0 திட்டமானது சிப்/சில்லு வடிவமைப்பு, செதில் உருவாக்கம், உபகரணங்கள், மூலப்பொருட்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட குறைக்கடத்தி மதிப்புச் சங்கிலியில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்