TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்ற முன்னறிவிப்பு விதி

August 26 , 2026 10 hrs 0 min 37 0
  • தமிழ்நாடு சட்டமன்ற விதி 55 மற்றும் விதி 56-இன் கீழ் சமர்ப்பிக்கப்படும் முன்னறிவிப்புகள் ஏற்கப்படுவதற்கு முன்பு, அவற்றை உறுப்பினர்களும் ஊடகங்களும் வெளியிடுவதற்கு சட்டமன்ற சபாநாயகர் தடை விதித்துள்ளார்.
  • விதி 55 என்பது விவாதத்திற்காக எழுப்பப்படும் பிரச்சினைகளைக் கையாள்கிறது. அதேவேளையில் விதி 56 ஒத்திவைப்புத் தீர்மானங்களைக் குறிக்கிறது.
  • உறுப்பினர்கள் ஒப்புதல் பெறுவதற்கு முன்னதாகவே இத்தகைய முன்னறிவிப்புகளை ஊடகங்களுடனும் சமூக ஊடகங்களிலும் பகிர்வதாக சபாநாயகர் தெரிவித்தார்.
  • விதி 36(5)-இன் படி, ஒரு முன்னறிவிப்பானது சபாநாயகரால் ஏற்கப்பட்டு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்படும் வரை அதனை வெளியிடக் கூடாது.
  • ஊடகங்களும் இத்தகைய முன்னறிவிப்புகள் ஒப்புதல் பெறுவதற்கு முன்பு அவற்றை வெளியிட வேண்டாம் என சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்