மத்திய அரசு 2030 ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டிலிருந்து 21 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியை இலக்காக நிர்ணயித்துள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது என்ற நிலையில் இதில் ஐந்தில் ஒரு பங்கை தமிழ்நாடு வழங்கும்.
திருப்பூர் ஜவுளித் தொகுப்பு மட்டும் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில்துறை தொகுப்புகளில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்காக ₹1,250 கோடி மதிப்பிலான திட்டத்தின் கீழ் "தோழி விடுதிகளை" தமிழ்நாடு அரசு கட்ட உள்ளது.
திருப்பூரில் தடகள ஆடைகளுக்கான சிறப்பு மையம் ஒன்றும் நிறுவப்பட உள்ளது.