TNPSC Thervupettagam

தமிழ்நாடு முதல்வர் – முதல்முறை சட்டமன்ற உறுப்பினர்

May 12 , 2026 3 days 107 0
  • தமிழக வெற்றிக் கழகத்தின் நிறுவனரும் நடிகருமான சி. ஜோசப் விஜய், 1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு, முதல் முறையாகவே முதலமைச்சராகப் பதவியேற்கும் இரண்டாவது நபர் என்ற பெருமையைப் பெற்றார்.
  • மாநிலத்தின் சிறுபான்மை சமய பிரிவைச் சேர்ந்த (கிறிஸ்தவர்) முதல் முதலமைச்சர் இவராவார்.
  • 2001 ஆம் ஆண்டில், ஜே. ஜெயலலிதாவை உச்சநீதிமன்றம் தகுதி நீக்கம் செய்த பிறகு, ஓ. பன்னீர்செல்வம் தனது முதல் சட்டமன்ற உறுப்பினர் பதவிக் காலத்திலேயே முதலமைச்சரானார்.
  • அதுபோலன்றி, விஜய் 2024 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதம் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராகத் தேர்தல் அரசியலில் நுழைந்தார்.
  • சி.என். அண்ணாதுரை 1967 ஆம் ஆண்டில்  முதலமைச்சராவதற்கு முன்பு 1957 முதல் 1962 ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய நிலையில், அவருக்குப் பின் வந்த மு. கருணாநிதி, 1969 ஆம் ஆண்டில் பதவியேற்ற போது மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
  • எம்.ஜி. ராமச்சந்திரன் 1977 ஆம் ஆண்டில் முதலமைச்சராவதற்கு முன்பு 1967 மற்றும் 1971 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
  • ஜெ. ஜெயலலிதா 1989 ஆம் ஆண்டில் சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும், அதற்கு முன்பு ராஜ்யசபா உறுப்பினராகவும் பணியாற்றிய பிறகு 1991 ஆம் ஆண்டில் முதலமைச்சரானார்.
  • எடப்பாடி கே. பழனிசாமி நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சர் அனுபவமும் பெற்ற பிறகு 2017 ஆம் ஆண்டில் முதலமைச்சரானார்.
  • மு.க. ஸ்டாலின் ஏழாவது முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு 2021 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • இதற்கிடையில், எம்.ஜி. ராமச்சந்திரனின் மனைவி ஜானகி ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இல்லாத நிலையிலேயே சிறிது காலம் முதலமைச்சராகப் பணி ஆற்றினார், ஆனால் அவரது அமைச்சரவை குறுகிய காலமே நீடித்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்