சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகளுக்கு எதிரான தமிழ்நாட்டின் வனவிலங்கு பாதுகாப்பு முன்னெடுப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான யானைகள் எச்சரிக்கை அமைப்பு ஆகியவை தேசிய விருதுகளைப் பெற்றன.
சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகளால் ஏற்படும் யானைகளின் இறப்பைத் தடுக்கும் வகையில் ஓசூர் வனக்கோட்டம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ‘ஒழிப்போம் துப்பாக்கியை, காப்போம் யானைகளை’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியது.
இந்தப் பிரச்சாரத்தின் இரண்டு கட்டங்களின் போது, 239 சட்டவிரோத நாட்டுத் துப்பாக்கிகள் தாமாக முன்வந்து ஒப்படைக்கப்பட்டன, இது வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைக் குறைக்க உதவியது.
ஓசூர் பிரச்சாரத்திற்காக கே. கார்த்திகேயனிக்கு சிறப்பு நடுவர் விருதும், முதுமலை நிலப்பரப்பில் சமூகம் சார்ந்த பாதுகாப்பு மற்றும் அறிவியல் கண்காணிப்புக்காக எஸ். செண்பகப்ரியாவுக்கு ஈக்கோ-வாரியர் (Eco-Warrior)விருதும் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மதுக்கரை வனச்சரகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் முன் எச்சரிக்கை அமைப்பு, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து சுமார் 2,800 யானைகள் ரயில் பாதைகளை பாதுகாப்பாகக் கடப்பதை உறுதி செய்ய உதவியுள்ளது.