உச்ச நீதிமன்றமானது தமிழக ஆளுநர் R.N. ரவி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக 10 மசோதாக்களை ஒதுக்கியது "சட்ட விரோதமானது மற்றும் நீதிமன்றத்தினால் ரத்து செய்யப்பட வேண்டியதாகும்" என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிபதிகள் J.P.பர்திவாலா மற்றும் நீதிபதி R. மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஆனது ஒரு மனதாக இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ், ஆளுநருக்கு எந்த விருப்புரிமையும் இல்லை என்றும், அவர் கட்டாயமாக அமைச்சர்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனையின் பேரில் தான் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.
அரசியலமைப்பின் 200வது சரத்து என்பது மசோதாக்களுக்கான ஒப்புதலைப் பற்றிய விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
மசோதாக்கள் ஆளுநர்களிடம் சமர்ப்பிக்கப்படும் போது ஆளுநர்களுக்குத் தற்போது நிர்ணயிக்கப் பட்ட காலக்கெடு:
ஒப்புதலை நிலுவையில் வைக்கும் பட்சத்தில், ஒரு மாதம்
மாநில அமைச்சரவையின் ஆலோசனைக்கு ஒரு மாறாக ஒப்புதலை நிலுவையில் வைக்கும் பட்சத்தில், மூன்று மாதங்கள்
ஆளுநர்களால் மறுபரிசீலனைக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒரு மாதம்
ஆளுநர் ஒப்புதலை நிலுவையில் வைத்து முழுமையான ரத்து செய்யும் அதிகாரம் அல்லது நிலுவையில் வைக்கும் அதிகாரம் என்ற வாய்ப்பினை மேற்கொள்ள முடியாது என்று நீதிமன்ற அமர்வு கூறியது.
ஆளுநர், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தல், ஒப்புதலை நிறுத்தி வைத்தல் மற்றும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அதனை ஒதுக்குதல் போன்ற ஏதேனும் ஒரு நடவடிக்கையை எடுக்க கடமைப்பட்டுள்ளார் என்றும் அது கூறியது.
இரண்டாவது சுற்றில் ஆளுநர் முன் சமர்ப்பிக்கப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அவர் அளிக்க வேண்டும் என்றும், இரண்டாவது சுற்றில் உள்ள மசோதா முதல் சுற்றில் இருந்து வேறுபட்டால் மட்டுமே அந்த நடவடிக்கை எடுப்பதில் விதிவிலக்கு இருக்கும் என்றும் அமர்வு கூறியது.
அரசியலமைப்புத் திட்டம் ஆனது "முழுமையான ரத்து செய்யும் அதிகாரம்" அல்லது "நிலுவையில் வைக்கும் அதிகாரம்" என்ற வாய்ப்பிற்கு இடமளிக்காது என்றும் அமர்வு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
ஆளுநர்கள் ஒப்புதல் வழங்க மிகவும் நீண்ட காலம் எடுத்துக் கொண்டதற்கும் உச்ச நீதிமன்றத்தின் (பஞ்சாப் மாநில தீர்ப்பு) முந்தைய தீர்ப்புகளுக்கு "குறைவான மதிப்பு" வழங்குவதற்கும் எந்தவிதமானக் காரணமும் இல்லை என்று அமர்வு கவலையினைக் குறிப்பிட்டது.
அந்த நீதிமன்ற அமர்வானது, 10 மசோதாக்கள் ஒப்புதல் அளிக்கப்பட்டதாகக் கருதப் படுவதாக அறிவிப்பதற்கு அரசியலமைப்பின் 142வது சரத்தின் கீழ் அதன் உள்ளார்ந்த அதிகாரங்களைப் பயன்படுத்தியது.
முடிவில், நீதிபதி பர்திவாலா, “ஓர் அரசியலமைப்பு எவ்வளவு மிக நல்ல முறையினதாக இருந்தாலும், அதை அமல்படுத்துபவர்கள் நல்ல ஆட்சியாளர்களாக இல்லாவிட்டால், அது மிக மோசமாகவே இருக்கும். ஓர் அரசியலமைப்பு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அதை அமல்படுத்துபவர்கள் மிக நல்ல ஆட்சியாளர்களாக இருந்தால், அது நன்றாகவே அமையும்” என்ற டாக்டர் B.R. அம்பேத்கர் அவர்களின் கூற்றினைக் குறிப்பிட்டார்.
ஆளுநர் “பாராளுமன்ற ஜனநாயகத்தின் நிறுவப்பட்ட மரபுகளுக்கு” ஏற்ப செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியது.
ஆளுநர் ஓர் அரசியல் செயல்பாட்டாளர் அல்ல, ஆனால் ஒரு “நண்பர், தத்துவ மற்றும் வழிகாட்டி” ஆவார்.
பின்னணி
தமிழ்நாட்டைப் பொறுத்த வரை இந்த 12 மசோதாக்கள் ஆனது மாநிலப் பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனங்களின் தொடர்பானது.
202 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையிலான காலக் கட்டத்தில் அரசியலமைப்பின் 200வது சரத்தின் கீழ் ஆளுநரின் ஒப்புதலுக்காக இவை மாநிலச் சட்டமன்றத்தால் அனுப்பப்பட்டன.
ஆளுநர் காலவரையின்றி அவற்றை நிலுவையில் வைத்திருந்தனர்.
இறுதியாக, 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் அவருக்கு எதிராக மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகிய போது, ஆளுநர் அதில் இரண்டு மசோதாக்களை மிக விரைவாக குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பியதோடு அதில் மீதமுள்ள 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் ஏதும் அளிக்காமல் அவற்றை நிறுத்தி வைத்தார்.
மாநிலச் சட்டமன்றம் ஆனது சில நாட்களுக்குள் ஒரு சிறப்பு அமர்வின் மூலம் அந்த 10 மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி, அதனை மீண்டும் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பியது.
200வது சரத்தின் முதல் விதிமுறையின் கீழான ஒரு நடைமுறையைப் பின்பற்றுவதாக உச்ச நீதிமன்றத்தில் மாநில அரசு வாதிட்டது.
ஆளுநர் 10 மசோதாக்களையும் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார்.
பின்னர் குடியரசுத் தலைவர் ஒரு மசோதாவுக்கு மட்டும் ஒப்புதல் அளித்து விட்டு, ஏழு மசோதாக்களை நிராகரித்து, மீதமுள்ள இரண்டு முன்மொழியப்பட்ட மசோதாக்களை தனது கருத்தில் கொள்ளாமல் ஒதுக்கினார்.