TNPSC Thervupettagam

தமிழ்நாட்டில் எகிப்திய கழுகுகளின் எண்ணிக்கை சரிவு

July 10 , 2026 8 days 93 0
  • தமிழ்நாட்டில் அருகி வரும் இனமான எகிப்திய கழுகுகளுக்கு (நியோஃப்ரோன் பெர்னோப்டெரஸ்) இனப்பெருக்கத் திட்டம் உள்ளிட்ட அவசரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
  • நீலகிரியில் இந்த இனம் உள்ளூரில் அழிந்துவிட்டது மற்றும் தமிழ்நாட்டில் உறுதிப்படுத்தப் பட்ட செயலில் உள்ள இனப்பெருக்கத் தளங்கள் எதுவும் இல்லை.
  • டைக்ளோஃபெனாக் (கால்நடை ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்து (NSAID)), மின்சாரம் தாக்குதல், விஷம் வைத்தல், வாழ்விட இடையூறு மற்றும் உணவு கிடைப்பது குறைதல் ஆகியவை முக்கிய அச்சுறுத்தல்களாகும்.
  • தமிழ்நாடு மற்றும் கர்நாடகா முழுவதும் 150 க்கும் குறைவான எகிப்திய கழுகுகளே எஞ்சியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கமானது (BNHS) தமிழ்நாட்டில் எகிப்தியக் கழுகு பாதுகாப்பு இனப்பெருக்கத் திட்டத்தை முன்மொழிந்துள்ளது.
  • வாழ்விடப் பொருத்தத்தின் அடிப்படையில் நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவை சாத்தியமான பாதுகாப்புத் தளங்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்