உள்துறை விவகாரங்கள் அமைச்சகமானது, நாட்டின் 576 மொழிகளின் களம் சார்ந்த ஒளிப்படங்களுடன் கூடிய இந்திய தாய்மொழிக் கணக்கெடுப்பினை (MTSI) நிறைவு செய்துள்ளது.
2 அல்லது அதற்கு மேற்பட்ட பத்தாண்டு கால மொழிக் கணக்கெடுப்புகளாகத் தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட தாய்மொழிகளின் கணக்கெடுப்புகளை நடத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
சில தேர்ந்தெடுக்கப்பட்ட மொழிகளின் மொழியியல் அம்சங்களையும் இது பதிவு செய்கிறது.
தேசியத் தகவல் மையம் மற்றும் தேசியத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் (NFDC) ஆகியவை, தற்போது கணக்கெடுக்கப்பட்ட தாய்மொழிகளின் மொழியியல் தரவுகளை ஒளிப்படம்-கேட்பொலிக் கோப்புகளாக ஆவணப்படுத்தி அவற்றைப் பாதுகாத்து வருகிறது.
2011 ஆம் ஆண்டு மொழிவாரி கணக்கெடுப்புத் தரவுகளின் பகுப்பாய்வின்படி, இந்தியாவில் 19,500க்கும் மேற்பட்ட மொழிகள் அல்லது கிளைமொழிகள் தாய் மொழிகளாகப் பேசப்படுகின்றன.
மொழிவாரிக் கணக்கெடுப்புத் தரவுகள் மொழியியல் ஆய்வு, திருத்தம் மற்றும் பகுத்தறிவுக்கு உட்பட்டு 121 தாய்மொழிகளாகப் பிரிக்கப்பட்டன.
43.6 சதவீத மக்கள் (52.8 கோடி மக்கள்) இந்தி மொழியைத் தங்கள் தாய் மொழியாக அறிவித்தனர்.
அதிகம் பேசப்படும் இரண்டாவது தாய்மொழி வங்காளம் ஆகும்.
9.7 கோடி மக்கள் அல்லது 8 சதவீத மக்கள் இந்த மொழியினைப் பேசுகிறார்கள்.