சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பானது, இத்தாலியின் ரோம் நகரில் 2023 ஆம் ஆண்டினைச் சர்வதேச தினை ஆண்டாக கொண்டாடுவதற்கான (IYOM 2023) தொடக்க விழாவை ஏற்பாடு செய்தது.
2023 ஆம் ஆண்டினைச் சர்வதேச தினை ஆண்டாகக் கொண்டாடுவதற்கான பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முன்மொழிதலை ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) ஏற்றுக் கொண்டது.
தினையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வேளாண் துறை அமைச்சகமானது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒரு தினை உணவுத் திருவிழாவை நடத்தி உள்ளது.