திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களுக்கான கல்வித் திட்டங்கள்
July 3 , 2025 2 days 45 0
தமிழ்நாடு அரசானது திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர்களை உள்ளடக்கும் வகையில் பின்வரும் இரண்டு கல்வி ஆதரவுத் திட்டங்களை அந்தப் பிரிவினருக்கும் விரிவுபடுத்தியுள்ளது.
புதுமைப் பெண் திட்டம்
தமிழ்ப் புதல்வன் திட்டம்
இரண்டு திட்டங்களும் அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6 முதல் 12 ஆம் வகுப்பு) உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதத்திற்கு 1,000 ரூபாய் உதவித் தொகை வழங்குகின்றன.
தற்போது, திருநர்கள் மற்றும் ஊடு பாலினத்தவர் ஆகிய இரு பிரிவினரும் அந்த இரண்டு திட்டங்களின் கீழ் பலன் பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
இத்திட்டங்களின் கீழ் பயன் பெற திருநர்கள் மற்றும் ஊடுபாலினத்தவர்கள் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் தமிழ் வழியில் படித்திருக்க வேண்டிய அவசியமில்லை என்ற தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
அவர்கள் தமிழ்நாடு திருநர்கள் நல வாரியத்திடமிருந்து பெறப்பட்ட செல்லுபடியாகும் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
உயர்கல்விக்காக மிகவும் சமமான ஒரு அணுகலை ஊக்குவிப்பதையும், விளிம்புநிலை சமூகங்களை ஆதரிப்பதையும் இந்த நடவடிக்கை நோக்கமாக உள்ளது.