மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை இணைந்து “துலிப்” (TULIP) என்றழைக்கப்படும் உள்ளுறைக் கற்றல் பயிற்சித் திட்டம் ஒன்றைத் தொடங்கியுள்ளன.
இந்தத் திட்டமானது பட்டப்படிப்பை நிறைவு செய்யும் புதிய பொறியியல் பட்டதாரிகளுக்காகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், இவர்கள் இந்தியாவில் உள்ள 4400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் 100 பொலிவுறு நகரங்களுடன் இணைந்துப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற இருக்கின்றனர்.
இந்த உள்ளுறைப் பயிற்சியானது ஓராண்டுக் காலம் என்ற அளவிற்கு நடத்தப்பட இருக்கின்றது.