TNPSC Thervupettagam

தென்னக மண்டலக் குழு கூட்டம் 2026

August 21 , 2026 4 days 37 0
  • தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடைபெற்ற 31வது தென்னக மண்டலக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை தாங்கினார்.
  • இந்தக் குழுவில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களும், புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் லட்சத்தீவுகள் ஆகிய ஒன்றியப் பிரதேசங்களும் இடம்பெற்றுள்ளன.
  • மத்திய அரசு மற்றும் தென்னக மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு தேவைப்படும் பிரச்சனைகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டது.
  • மாநிலங்கள் மறுசீரமைப்புச் சட்டம், 1956-இன் பிரிவுகள் 15 முதல் 22 வரை தென்னக மண்டலக் குழு உருவாக்கப்பட்டு மத்திய-மாநில மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான விவாதங்களுக்கான மன்றமாகச் செயல்படுகிறது.
  • இது பிராந்தியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கும், வளர்ச்சித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், கூட்டுறவை மேம்படுத்துவதற்குமான ஓர் ஆலோசனை அமைப்பாகச் செயல்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்