தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) படி, 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மனிதக் கடத்தல் வழக்குகள் தெலுங்கானாவில் பதிவாகி உள்ளன.
2024 ஆம் ஆண்டில் தெலுங்கானா 423 மனிதக் கடத்தல் வழக்குகளைப் பதிவு செய்துள்ளது; இது இந்தியாவில் பதிவான மொத்த வழக்குகளில் கிட்டத்தட்ட 20% ஆகும்.
தெலுங்கானாவில் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 25.9% அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் அடையாளம் காணப்பட்ட 814 கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களில், 792 பேர் பெண்கள் மற்றும் 49 பேர் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் ஆவர்.
கடத்தல் வழக்குகளுக்குப் பின்னால் உள்ள முக்கிய காரணமாக "பாலியல் சுரண்டல்" இருந்தது; இது மாநிலத்தில் 770 பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையது.
தெலுங்கானா ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 1.1 வழக்குகள் என்ற அளவில் நாட்டின் மிக உயர்ந்த கடத்தல் குற்ற விகிதத்தைப் பதிவு செய்துள்ளது; இது தேசிய சராசரியான 0.2-ஐ விட அதிகம்.