தேசியப் பசுமை ஹைட்ரஜன் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் துணை விளைபொருட்கள் ஆகியவற்றின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்திய நாட்டினை மாற்றுவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
பசுமை ஹைட்ரஜனின் தேவை உருவாக்கம், உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றிற்கான வசதிகளை வழங்க இந்தத் திட்டம் உதவும்.
இது இந்திய நாட்டினை எரிசக்தித் துறையில் சுயசார்பு உடையதாக மாற்றவும், பொருளாதாரத்தின் முக்கியத் துறைகளில் கார்பன் நீக்கம் செய்யவும் உதவும்.