நாட்டின் 2.5 லட்சம் பஞ்சாயத்துகளில் 240 பஞ்சாயத்துகளுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான தேசியப் பஞ்சாயத்து விருதுகளை புதுதில்லியில் மத்தியப் பஞ்சாயத்துத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் வழங்கினார்.
மேலும் அமைச்சர் பஞ்சாயத்துகளுக்கான புவி அடிப்படையிலான தீர்வு ஆதரவு அமைப்பான ‘கிராம் மஞ்சித்ரா’ என்ற ஒரு இடஞ்சார்ந்த திட்டமிடல் செயலியையும் தொடங்கி வைத்தார்.
மூன்றாம் நிலை நகரங்களில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கருவிகளைப் பயன்படுத்துவதற்கு வசதியாக சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலமாக தமிழகத்திற்கு ‘இ-பஞ்சாயத்து புராஸ்கர் விருது’ வழங்கப்பட்டது.