TNPSC Thervupettagam

தேசியப் பாடலுக்கான முன்னுரிமை விதி

July 19 , 2026 37 days 113 0
  • அரசு நிகழ்ச்சிகளில் தேசிய கீதமான 'ஜன கண மன' பாடுவதற்கு அல்லது இசைக்கப் படுவதற்கு முன்பாக, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' இசைக்கப் படுவதை அல்லது பாடப்படுவதை உறுதி செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) உத்தரவிட்டுள்ளது.
  • இரண்டு தேசியச் சின்னங்களான தேசிய கீதம் மற்றும் தேசிய பாடலுக்கு சரியான உரை, வரி வடிவம் மற்றும் உச்சரிப்பு பின்பற்றப்பட வேண்டும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 'வந்தே மாதரம்' பாடல் பங்கிம் சந்திர சட்டர்ஜியால் எழுதப்பட்டு, 1880களில் (1882) அவரது 'ஆனந்தமடம்' என்ற நாவலுடன் வெளியிடப்பட்டது.
  • 1937 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் தனது கூட்டங்களில் 'வந்தே மாதரம்' பாடலின் முதல் இரண்டு பத்திகளைப் பயன்படுத்த முடிவு செய்தது.
  • இந்திய அரசியலமைப்பு 'வந்தே மாதரம்' பாடலுக்கு தேசியப் பாடல் அந்தஸ்தை வழங்கியுள்ள அதே சமயம் ரவீந்திரநாத் தாகூரால் எழுதப்பட்டு இசையமைக்கப் பட்ட 'ஜன கண மன' தேசிய கீதமாகும்.
  • வந்தே மாதரம் பாடுவதற்கு இடையூறு ஏற்படுத்துவது அல்லது அவமதிப்பது ஆகியவற்றைத் தண்டனைக்குரிய குற்றமாக மாற்றுவதற்காக வேண்டி தேசியச் சின்னங்களை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டம், 1971-இல் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்