TNPSC Thervupettagam
August 21 , 2026 3 days 790 0
  • புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில், தேசத்தைக் கட்டியெழுப்பிய பங்களிப்பிற்காக 15 பேருக்கு 'தேசிய அனுபவ் விருதுகள் 2026' வழங்கப்பட்டது.
  • பாஸ்போர்ட்/கடவுச்சீட்டு சேவா கேந்திராக்கள், விதி சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப தழுவல் மற்றும் அரசு கணக்குகள் உள்ளிட்ட திட்டங்களில் விருது பெற்றவர்கள் பங்காற்றியுள்ளனர்.
  • மத்திய அரசுப் பணியாளர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், 12 பொதுத்துறை வங்கிகள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களது பணி அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள 'அனுபவ்' தளம் வழிவகை செய்கிறது.
  • 'பென்ஷன் மித்ரா' கையேடு மற்றும் 5-வது தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் இயக்கத்திற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டன.
  • ஓய்வூதிய நடைமுறைகளை எளிமைப்படுத்துவதற்கும் குடும்ப ஓய்வூதிய விதிகளை வலுப்படுத்துவதற்குமான சீர்திருத்தங்களை அரசு சுட்டிக் காட்டியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்