இது தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையினால் ஏற்பாடு செய்யப் பட்டது.
இந்த மாநாட்டின் கருத்துரு ‘அறிவுசார் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ஊக்குவிக்கச் செய்வதற்காக அறிவுசார் சொத்து சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்துதல்’ என்பதாகும்.
2015 ஆம் ஆண்டில் 81வது இடத்தில் இருந்த இந்தியா 2022 ஆம் ஆண்டில் 40வது இடத்திற்கு முன்னேறியது.
இந்தத் தரவரிசையின் முதல் 10 இடங்களுக்குள் இந்தியாவினைக் கொண்டு வர நமது அரசாங்கம் முயல்கிறது.
அறிவுசார் சொத்து என்பது புத்தாக்கங்கள் போன்ற அறிவின் படைப்பாக்கங்கள்; இலக்கிய மற்றும் கலைப் படைப்புகள்; வடிவமைப்புகள்; வர்த்தகத்தில் பயன்படுத்தப் படும் சின்னங்கள், பெயர்கள் மற்றும் படங்கள் ஆகியவற்றினைக் குறிக்கிறது.