TNPSC Thervupettagam

தேசிய தொழில்முனைவோர் பிரச்சாரம்-II

August 26 , 2026 10 hrs 0 min 33 0
  • ஊரகப் பெண்களிடையே தொழில்முனைவை ஊக்குவிக்கும் நோக்கில், ஊரக வளர்ச்சி அமைச்சகமானது தீன்தயாள் அந்தியோதயா யோஜனா-தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (DAY-NRLM) கீழ் தேசிய தொழில்முனைவோர் பிரச்சாரம்-II-ஐத் தொடங்கியது.
  • விவசாயம் மற்றும் விவசாயம் சாராத துறைகளில் பெண்கள் தலைமையிலான தொழில் நிறுவனங்களை மையமாகக் கொண்ட இந்த மூன்று மாத காலப் பிரச்சாரம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 முதல் நவம்பர் 21 வரை நடைபெற உள்ளது.
  • இது 5 லட்சம் சுயஉதவிக் குழு (SHG) பெண்களுக்குப் பயிற்சி அளித்தல், 50,000 ஊரகத் தொழில் நிறுவனங்களை முறைப்படுத்துதல் மற்றும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக 50,000 சமூகப் பணியாளர்களைத் தயார்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் 2 லட்சம் உறுப்பினர்களைச் சேர்ப்பதையும், 20 லட்சம் பெண்களிடையே நிலையான வேளாண்-சுற்றுச்சூழல் நடைமுறைகளை மேம்படுத்துவதையும் இப்பிரச்சாரம் இலக்காகக் கொண்டுள்ளது.
  • டிஜிட்டல் வர்த்தகத்திற்கான திறந்தவெளி வலையமைப்பு (ONDC) மற்றும் அரசு மின்னணு-சந்தை (GeM) ஆகியவற்றில் 25,000 சுயஉதவிக் குழு உறுப்பினர்களை இணைக்க இது திட்டமிட்டுள்ளது. மேலும் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் பணியாளர்கள் உத்யாம் சகிகள் என்று அங்கீகரிக்கப் படுவார்கள்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்