மைலாப்பூர் P.S. சீனியர் செகண்டரி (உயர் நிலை) பள்ளியைச் சேர்ந்த ரேவதி பரமேஸ்வரன்2025 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
திருப்பூரில் உள்ள பாரதியார் நூற்றாண்டுப் பள்ளியைச் சேர்ந்த விஜயலட்சுமி, தமிழ்நாட்டிலிருந்து இந்த விருதிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு நபர் ஆவார்.
இந்தியா முழுவதும் மொத்தம் 45 ஆசிரியர்கள் 2025 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற உள்ளனர்.
விருது வழங்கும் விழா செப்டம்பர் 05 ஆம் தேதி புது டெல்லியில் நடைபெற உள்ளது.
விருது பெறுபவர் ஒவ்வொருவருக்கும் ஒரு தகுதிச் சான்றிதழ், 50,000 ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வழங்கப்படும்.