TNPSC Thervupettagam

தேசிய மக்கள்தொகைப் பதிவேடு (NPR)

March 14 , 2020 1975 days 1019 0
  • NPR அல்லது தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டிற்காக (National Population Register) குடிமக்கள் எந்தவொரு ஆவணமும் சமர்ப்பிக்கப்பட வேண்டியதில்லை.
  • அத்தகைய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால் யாரும் "டி" (Doubtful - சந்தேகத்திற்குரியவர்கள்) என்று அறிவிக்கப்பட மாட்டார்கள்.
  • இந்தத் தகவலானது நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியிடப் பட்டது.
  • NPRக்கான தகவல்களைச் சேகரிக்கும் செயல்முறையானது 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் நிறைவடைய இருக்கின்றது.
  • அசாம் மாநிலம் தவிர, இந்தியா முழுவதும் NPR கணக்கெடுப்பானது நடத்தப்பட இருக்கின்றது. ஏனெனில் அசாம் மாநிலமானது ஏற்கனவே தேசியக் குடிமக்கள் பதிவேட்டின் கீழ் வருகின்றது.
  • 2010 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 2011 ஆம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டிற்கான தரவும் சேகரிக்கப் பட்டது.

NPR பற்றி

  • NPR என்பது நாட்டில் வழக்கமாக வாழும் மக்களின் தரவுகளைக் கொண்ட ஒரு பதிவேடாகும்.
  • இது குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை (குடிமக்களின் பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டைகளின் விநியோகம்) விதிகள், 2003 ஆகியவற்றின் கீழ் உள்ளூர் (கிராமம் / துணை நகரம்), துணை மாவட்டங்கள், மாவட்டம், மாநில மற்றும் தேசிய அளவில் சேகரிக்கப்பட்ட தகவல்களைக் கொண்டுள்ளது.
  • NPRன் நோக்கங்களுக்காக ஒரு வழக்கமான குடியிருப்பாளர் என்பவர் கடந்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக ஒரு உள்ளூர் பகுதியில் வசித்த ஒரு நபர் அல்லது அடுத்த ஆறு மாதங்களுக்கு அந்தப் பகுதியில் வசிக்க விரும்பும் ஒரு நபர் என வரையறுக்கப் படுகின்றார்.
  • இந்தச் சட்டமானது இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனையும் கட்டாயமாகப் பதிவு செய்து தேசிய அடையாள அட்டையை வழங்க வழிவகை செய்கின்றது.
  • NPR புதுப்பிப்புச் செயல்முறையானது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் தலைமைப் பதிவாளர் மற்றும் பதவிவழி அதிகாரப்பூர்வ கணக்கெடுப்பு ஆணையரின் உதவியுடன் மேற்கொள்ளப் பட இருக்கின்றது.

NPR மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

  • NPR மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் செயல்முறை ஆகியவை ஒரே நேரத்தில் தொடங்கும். ஆனால் இந்த இரண்டு தரவுத் தளங்களும் ஒரே மாதிரியானவை அல்ல.
  • இந்திய மக்கள்தொகையின் வெவ்வேறு குணாதிசயங்கள் குறித்த பல்வேறு புள்ளி விவரத் தகவல்களின் மிகப்பெரிய ஒரு ஒற்றை ஆதாரமாக இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு (பத்தாண்டுகளுக்கு ஒரு முறை) உள்ளது.
  • NPR ஆனது மக்கள்தொகை சார்ந்த தகவல்களை மட்டுமே கொண்டிருக்கும். ​​ஆனால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கு மக்கள்தொகை விவரம், பொருளாதாரச் செயல்பாடு, கல்வியறிவு & கல்வி மற்றும் வீடுகள் மற்றும் வீட்டு வசதிகள் போன்ற கூடுதல் தகவல்களும் தேவைப் படுகின்து.
  • கடந்த பத்தாண்டில் நாட்டின் முன்னேற்றத்தை மறு ஆய்வு செய்வதற்கும் அரசாங்கத்தின் தற்போதைய திட்டங்களைக் கண்காணிப்பதற்கும் எதிர்காலத்திற்கான திட்டங்களுக்கும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பானது அடிப்படையாக விளங்குகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்