காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் ஆணையமானது (Khadi and Village Industries Commission - KVIC) இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் மற்றும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தேனீப் பெட்டிகளை வழங்கியுள்ளது.
இது “தேன் திட்டம்” என்ற முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தத் திட்டமானது பிரதமர் நரேந்திர மோடியினால் 2017 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இவர் இதை “இந்தியாவில் இனிப்புப் புரட்சியின்” தொடக்கம் என்று அறிவித்தார்.
KVIC
KVIC என்பது காதி மற்றும் கிராமப்புற தொழிற்சாலைகள் ஆணையத்தின் சட்டம், 1956-ன் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
இது தேசிய அளவில் பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டத்தைச் செயல்படுத்தும் தலைமை நிறுவனமாகும்.