இந்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகத்தின் கீழான இந்திய தொல்லியல் ஆய்வு அமைப்பானது “தேவயாடனம் – இந்திய ஆலயக் கட்டிடக் கலை மீதான ஒரு பயணம்” என்ற இரண்டு நாட்கள் அளவிலான ஒரு சர்வதேச மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது.
இது கர்நாடகாவின் ஹம்பி என்னுமிடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் G. கிஷான் ரெட்டி இந்த மாநாட்டினைத் தொடங்கி வைக்கிறார்.
இந்த மாநாடானது, ஆலயத்தின் தத்துவ, சமய, சமூக, பொருளாதார, தொழில்நுட்ப, அறிவியல், கலை மற்றும் கட்டிடக்கலை அம்சங்கள் பற்றி விவாதிப்பதற்கான ஒரு மாநாடாகும்.