பொதுச் சேவை உதவி நிதி (USOF) நிறுவனமானது, சமீபத்தில் தொலைத்தொடர்பு தொழில் நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இது கிராமப்புறம் சார்ந்த தகவல்தொடர்பு தொழில்நுட்பப் பயன்பாடுகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்கு நிதியளிப்பதற்கும் மற்றும் தொலைத் தொடர்பு சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கச் செய்வதற்கும் மேம்படுத்துவதற்கும் கல்வியாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையினரிடையே ஒருங்கிணைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது, உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்ட உள்நாட்டுத் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கவும், உள் சேர்க்கவும் இந்திய நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குகிறது.