TNPSC Thervupettagam

தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் அமலாக்கம்

May 11 , 2026 4 days 107 0
  • மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை இறுதி விதிகளுடன் அதிகாரப் பூர்வ அரசிதழில் வெளியிட்டு முழுமையாக நடைமுறைப்படுத்தியுள்ளது.
  • இந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் 2025 ஆம் ஆண்டு நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தன.
  • இந்த புதிய கட்டமைப்பு, 29 பழைய தொழிலாளர் சட்டங்களுக்குப் பதிலாக நான்கு எளிமைப்படுத்தப்பட்ட சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
  • அந்த நான்கு சட்டத் தொகுப்புகளானது ஊதியச் சட்டத் தொகுப்பு (2019), தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு (2020), சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு (2020) மற்றும் தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச்சூழல் சட்டத் தொகுப்பு (2020) ஆகியனவாகும்.
  • குறைந்தபட்ச ஊதியம், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழில் செய்வதை எளிதாக்குதல் ஆகியவற்றை உறுதி செய்வதே இந்த சீர்திருத்தங்களின் நோக்கமாகும்.
  • ஊதியச் சட்டத் தொகுப்பு என்பது குறைந்தபட்ச ஊதியம், ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்குதல் மற்றும் தொழிலாளர்களுக்கு சமமான ஊதியம் ஆகியவற்றை வழங்குகிறது.
  • தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு என்பது தொழிற்சங்கங்கள், தொழில் தகராறுகள், ஆட்குறைப்பு மற்றும் நிறுவனங்களை மூடுதல் போன்ற அம்சங்களைக் கையாள்கிறது.
  • சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு என்பது முறைசார்ந்த மற்றும் முறைசாரா தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி (PF), ஓய்வூதியம், காப்பீடு மற்றும் மகப்பேறு நன்மைகளை வழங்குகிறது.
  • தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிச்சூழல் சட்டத் தொகுப்பு என்பது தொழிலாளர் பாதுகாப்பு, சுகாதார வசதிகள், வாரத்திற்கு அதிகபட்சம் 48 வேலை நேரங்கள், கூடுதல் நேர ஊதியம் மற்றும் வார விடுமுறை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்