TNPSC Thervupettagam

நகர்ப்புறத்திற்கான ஜல் ஜீவன் திட்டம்

February 10 , 2021 1619 days 704 0
  • ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் நகர்ப்புற நீர் வழங்கல் திட்டமானது நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப் பட்டுள்ளது.
  • இதில் நீர்நிலைகளைப் புனரமைத்தல் மற்றும் மறுபயன்பாட்டு நீரிலிருந்து 20% அளவிற்கு குடிநீர் வழங்கல் ஆகியவை அடங்கும்.
  • 2.68 கோடி நகர்ப்புற வீடுகளில் குழாய் இணைப்புகள் இல்லை என்று தற்போது மதிப்பிடப் பட்டுள்ளது.
  • அனைத்து 4,378 சட்ட ரீதியான நகரங்களிலும் குடிநீர் இணைப்புகளின் பற்றாக்குறையைக்  குறைக்க இந்தத் திட்டம் முயற்சிக்கும்.
  • 500 நகரங்களில் 2.64 கோடி என்ற அளவில் கழிவுநீர் இணைப்புகள் மீதான பற்றாக்குறையைக் குறைப்பதும் இதன் நோக்கமாகும்.
  • இது தற்போதைய புனரமைப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்திற்கான அடல் திட்டத்தின் கீழ் இருக்கும்.
  • இந்தத் திட்டத்தில் நிலையான நன்னீர் விநியோகத்தை அதிகரிக்க நீர்நிலைகளைப் புனரமைப்பதும் அடங்கும்.
  • மேலும் பசுமையான இடங்களை (green spaces) உருவாக்குவதும் இதில் அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்