நதிகளை இணைப்பதற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்காக ஒரு தனிப்பட்ட (பிரத்தியேக) அமைப்பை நிறுவ மத்திய அரசு முயற்சித்து வருகின்றது.
இது நதிகள் தேசிய நதிநீர் இணைப்பு ஆணையம் (National Interlinking of Rivers Authority - NIRA) என்று அழைக்கப்பட உள்ளது.
முன்மொழியப்பட்ட இந்த அமைப்பானது மாநிலங்களுக்கு இடையேயான மற்றும் மாநிலங்களுக்குள் மேற்கொள்ளப்படும் நதிநீர் இணைப்புத் திட்டங்களை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
மாநிலங்களுக்குள்ளும் மாநிலங்களுக்கு வெளியில் இருந்தும் நிதி திரட்டுவதற்கான ஏற்பாடுகளையும் இது மேற்கொள்ள இருக்கின்றது.