நதிப்புற நகரங்கள் கூட்டணி உறுப்பினர்களின் வருடாந்திரக் கூட்டம்
February 17 , 2023 934 days 366 0
நதிப்புற நகரங்கள் கூட்டணி உறுப்பினர்களின் வருடாந்திரக் கூட்டம் ஆனது புனே நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய நகர்ப்புற விவகாரங்கள் கல்வி நிறுவனத்துடன் (NIUA) இணைந்து தேசியத் தூய்மை கங்கை திட்டத்தினால் (NMCG) இது ஏற்பாடு செய்யப்பட்டது.
DHARA என்பது நகர்ப்புற நதிகளுக்கான முழு அளவிலான நடவடிக்கையை மேற் கொள்தல் என்பதனைக் குறிக்கிறது.
நதிப்புற நகரங்கள் கூட்டணி ஆனது 2021 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இந்தியாவின் நதிப்புற நகரங்கள், நகர்ப்புற நதிகளின் நிலையான மேலாண்மை அமைப்பிற்கான தகவல் பரிமாற்றம் மற்றும் கலந்துரையாடல் ஆகியவற்றினை மேற் கொள்வதற்கான ஒரு பிரத்தியேகத் தளமாகும்.
2021 ஆம் ஆண்டில் 30 நகரங்களை உறுப்பினராக கொண்டு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது இது இந்தியா முழுவதும் 95 நகரங்கள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளது.