ஜல் சக்தி அமைச்சகமானது சமீபத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துடன் இணைந்து நதி நகரங்கள் என்ற கூட்டணியைத் தொடங்கியுள்ளது.
இது நகர்ப்புறங்களின் வழியே பாயும் நதிகளின் நிலையான மேலாண்மைக்காக வேண்டிய கருத்துகளை உருவாக்கவும், அவற்றை விவாதிக்கவும் மற்றும் அது பற்றிய தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்குமான ஒரு பிரத்தியேக தளமாகும்.
இந்தக் கூட்டணியானது கட்டமைத்தல், திறன் மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு போன்ற மூன்று பரந்த கருத்துருக்கள் மீது ஈடுபாடு செலுத்தும்.
கங்கைப் படுகையிலுள்ள நகரங்களில் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டாலும் அதற்கு அப்பால் உள்ள நகரங்களுக்கும் இது நீட்டிக்கப்பட்டது.