தமிழ்நாடு அரசானது குடிமக்களுக்கு வாட்ஸ்அப் (கட்செவி அஞ்சல்) மூலம் அரசு சேவைகளை வழங்குவதற்காக ‘நம்ம அரசு’ எனும் வாட்ஸ்அப் சாட்பாட்-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சாட்பாட் ஆனது UmagineTN 2026 நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது.
குடிமக்கள் கட்செவி அஞ்சல் வழியே +91 7845252525 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம்.
இது பல துறைகளிலிருந்து 51 அரசு சேவைகளை வழங்குகிறது.
இதன் வழியே கிடைக்கும் சேவைகளில் சான்றிதழ்களைப் பதிவிறக்குதல், பயன்பாட்டுக் கட்டணம் மற்றும் வரிக் கட்டணங்களைச் செலுத்துதல், நலத்திட்டங்கள், குறைகளைத் தெரிவித்தல் உள்ளிட்ட இதர பலவும் அடங்கும்.