- இந்தக் குறியீடானது நல்லாட்சி தினத்தன்று (டிசம்பர் 25) வெளியிடப்பட்டது.
- இந்தக் குறியீடானது, நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொது மக்கள் குறைதீர்ப்புத் துறையினால் (Department of Administration Reforms and Public Grievances) தயாரிக்கப்பட்டது.
- அனைத்து மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள ஆளுகையின் நிலையை ஒப்பிட்டு ஆளுகையை மேம்படுத்துவதற்கும், நல்ல முடிவுகளை வழங்கும் அணுகுமுறைகள் மற்றும் நிர்வாக முறைகளுக்கு மாறுவதற்கும் வேண்டிய சில பொருத்தமான உத்திகளை வகுத்து அவற்றைச் செயல்படுத்துவதற்கு வேண்டி அவற்றிற்கு உதவுவதே இந்தக் குறியீட்டின் ஒரு நோக்கமாகும்.
பல்வேறு மாநிலங்களின் செயல்திறன்
- ஒருங்கிணைந்தத் தரவரிசையில் குஜராத் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மற்றும் கோவா ஆகியவையும் உள்ளன.
- ஒன்றியப் பிரதேசங்கள் பிரிவின் ஒருங்கிணைந்தத் தரவரிசையில் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது.
- துறைகள் சார்ந்த குறியீட்டில், வர்த்தகம் மற்றும் தொழில் துறையில் உத்தரப் பிரதேசம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- நீதித் துறை மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு என்ற பிரிவில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
