இந்திய அரசும் சர்வதேச விவசாய மேம்பாட்டு நிதியமும் (IFAD) இணைந்து 2026-2033 ஆம் ஆண்டிற்கான புதிய நாட்டின் மூலோபாய வாய்ப்புகள் திட்டத்தை (COSOP) தொடங்கியுள்ளன.
COSOP என்பது கிராமப்புற வாழ்வாதாரங்களை வலுப்படுத்துவதற்கும், கிராமப்புற வருமானத்தை மேம்படுத்துவதற்குமான ஒரு எட்டு ஆண்டு கால உத்திசார் கட்டமைப்பாகும்.
இத்திட்டம் பருவநிலையைத் தாங்கும் விவசாயம், நிதி உள்ளடக்கம் மற்றும் சந்தை சார்ந்த கிராமப்புற மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
சுய உதவிக் குழுக்கள் (SHGs), உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மற்றும் கூட்டுறவு அமைப்புகள் போன்ற அடிமட்ட நிறுவனங்களை வலுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
நபார்டு (NABARD) வங்கியின் ஆதரவுடன் விவசாயம், மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும் COSOP செயல் படுகிறது.
இந்தியாவின் கிராமப்புற மேம்பாடு மற்றும் டிஜிட்டல் விவசாய அனுபவங்களை பிற நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெற்கு-தெற்கு ஒத்துழைப்பிற்கு இத்திட்டம் ஆதரவளிக்கிறது.