2040 ஆம் ஆண்டுக்குள் பசுமை இல்ல வாயுக்களின் வெளியீட்டினை நிகர பூஜ்ஜியம் என்ற அளவில் (Net Zero) குறைப்பதற்கான தனது உறுதிமொழியினை விப்ரோ நிறுவனமானது அறிவித்துள்ளது.
இது வெப்பநிலை உயர்வினை 1.5oC எனும் வரம்பில் வைத்திருப்பதற்கான பாரீஸ் உடன்படிக்கையின் குறிக்கோளுடன் ஒத்திருக்கிறது.
2016-17 எனும் அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடுகையில் பசுமை இல்ல வாயுக்களின் முழுமையான வெளியீடுகளை 2030 ஆம் ஆண்டுக்குள் 55% என்ற அளவிற்குக் குறைப்பதற்கான இடைநிலை இலக்கினையும் இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.