மத்திய சுற்றுச் சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது (Ministry of Environment, Forest and Climate Change - MoEFCC) நிர்மல் டாட் அபியான் என்ற ஒரு தூய்மை இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.
இந்தத் திட்டமானது கடற்கரைகளில் தூய்மையை (துப்புரவு) மேம்படுத்துவதையும் கடலோர சுற்றுச் சூழல் அமைப்புகளின் முக்கியத்துவம் குறித்து குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கங்களாகக் கொண்டுள்ளது.
தேசிய பசுமைப் படையுடன் (National Green Corps - NGC) இணைந்து நாடு முழுவதும் உள்ள 10 கடலோர மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள 50 கடற்கரைகளில் ஒரு மிகப் பெரிய அளவில் தூய்மை இயக்கமானது செயல்படுத்தப் பட்டது.
தேசிய பசுமைப் படை என்பது NGC சுற்றுச்சூழல் பள்ளி மன்றங்களுடன் இந்தியாவில் உள்ள சுமார் 1,20,000 பள்ளிகளை உள்ளடக்கிய MoEFCCன் ஒரு திட்டமாகும்.
இந்தியாவில் உள்ள பள்ளிகளில் சுற்றுச்சூழல் செயல்பாடானது NGC மூலம் ஊக்குவிக்கப் படுகின்றது.