2025 ஆம் ஆண்டு டிசம்பர் 01 ஆம் தேதியன்று, 2025 ஆம் ஆண்டு பெருநிறுவன விவகார அமைச்சகம் (MCA) நிறுவனங்கள் (வரையறை விவரங்களின் விவரக்குறிப்பு) திருத்த விதிகளை அறிவித்தது.
இந்தத் திருத்தம் ஆனது 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ், உச்ச வரம்புகளை அதிகரிப்பதன் மூலம் சிறிய நிறுவனங்களை மறுவரையறை செய்தது.
அங்கீகரிக்கப்பட்ட மூலதன வரம்பு ஆனது தற்போது 10 கோடி ரூபாயாகவும், இலாப (விற்றுமுதல்) வரம்பு 100 கோடி ரூபாயாகவும் உள்ளது.
இந்த விரிவாக்கம் "சிறிய நிறுவனம்" என்ற பிரிவின் கீழ் அதிகமான நிறுவனங்களைக் கொண்டு வருவதால், இணக்கத் தேவைகளை எளிதாக்குகிறது.
இந்த மாற்றம் ஆனது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களை (MSMEs) ஆதரிப்பதோடு, வளர்ச்சியை ஊக்குவித்து, இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்குகிறது.