நிலக்கரியை மெத்தனாலாக மாற்றும் முதல் ஆலை - இந்தியா
January 19 , 2022 1280 days 525 0
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, ஹைதராபாத்தில் BHEL எனும் நிறுவனத்தினால் கட்டப்பட்ட 'நிலக்கரியை மெத்தனாலாக மாற்றும் முதல் ஆலையை' திறந்து வைத்தார்.
இது தற்போது, அதிக சாம்பல் மூலக்கூறு கலந்த இந்திய ரக நிலக்கரியில் இருந்து 99 சதவீதத்திற்கும் அதிகமான தூய்மைத் திறனுடன் மெத்தனாலை உற்பத்தி செய்து வருகிறது.
உயர் சாம்பல் மூலக்கூறு கொண்ட இந்திய ரக நிலக்கரியை வாயுவாக்கலின் மூலம் மெத்தனாலாக மாற்றும் தொழில்நுட்பமானது, இந்தியாவிலேயே முதல் முறையாக கையாளப் படுகிறது.