TNPSC Thervupettagam

நிலக்கரி இறக்குமதி உயர்வு

March 13 , 2020 1984 days 693 0
  • இந்தியாவில் நிலக்கரி இறக்குமதியானது 2019 ஆம் ஆண்டில் 12.6% என்ற அளவிற்கு உயர்ந்து கிட்டத்தட்ட 200 மில்லியன் டன்னாக உள்ளது.
  • இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியானது முக்கியமாக மின் உற்பத்திக்குப் பயன்படுத்தப் படுகின்றது.
  • இந்தியாவின் மொத்த நிலக்கரி இறக்குமதியில் கிட்டத்தட்ட 60% இறக்குமதியானது இந்தோனேசியாவிலிருந்து வருகின்றது.
  • இருப்பினும், எஃகு உற்பத்தியில் முக்கியமாக பயன்படுத்தப்படும் நிலக்கரியின் (coking coal) இறக்குமதியானது ஓரளவு சரிந்துள்ளது.
  • உலகில் நிலக்கரி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நிலக்கரி உற்பத்தியில் சீனா முதல் இடத்தில் உள்ளது.
  • சீனாவும் இந்தியாவும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி இறக்குமதியாளர் நாடுகளாக விளங்குகின்றன.
  • உலகின் அதிக அளவு நிலக்கரியை நுகரும் இரண்டு நாடுகள் சீனா மற்றும் இந்தியா (உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள்) ஆகும்.
  • ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இந்தோனேசியா போன்ற நிலக்கரியை உற்பத்தி செய்யும் நாடுகள் தங்களது உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் ஏற்றுமதி செய்வதற்கான அதிக திறனைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்