மேற்பரப்பு நிலக்கரி / லிக்னைட் வாயுவாக்கல் திட்டங்களை மேம்படுத்துவதற்காக ₹37,500 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது.
எரிபொருள்கள் மற்றும் இரசாயனங்களை உற்பத்தி செய்வதற்குப் பயன்படும் தொகுப்பு வாயுவாக (Syngas) நிலக்கரி மற்றும் லிக்னைட்டை மாற்றுவதற்கான நிலக்கரி வாயுவாக்கல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நிலக்கரி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படுகிறது. மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் டன் (MT) நிலக்கரியை வாயுவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழான நிதியுதவியானது ஆலை மற்றும் இயந்திரச் செலவில் 20% ஆக வரம்பிடப்பட்டுள்ளதுடன் மேலும், ஒரு திட்டத்திற்கு அதிகபட்சமாக ₹5,000 கோடி நிதி உதவி வழங்கப்படும்.
ஆத்மநிர்பார் பாரத் முன்னெடுப்பின் கீழ் யூரியா, அம்மோனியா, மெத்தனால் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் இறக்குமதியைக் குறைத்து, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.