இந்தியா மற்றும் சீனா ஆகியவை இணைந்து நிலவில் ஒரு அணு மின் நிலையத்தினை நிறுவுவதில் ரஷ்யாவுடன் கூட்டுறவினை மேற்கொள்ள உள்ளன.
இந்த முன்னெடுப்பானது, 2040 ஆம் ஆண்டிற்குள் மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் விண்வெளிப் பயணத்திற்கான இந்தியாவின் ஒரு முதன்மைத் திட்டத்துடனும், நிலவில் ஆய்வுத் தளத்தை நிறுவும் திட்டத்துடனும் கூட்டுறவினை மேற்கொள்ள உள்ளது.
சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையம் (ILRS) என்று அழைக்கப் படும் "555 திட்டத்தை" உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது.
இதற்காக சீனாவானது 50 நாடுகள், 500 சர்வதேச அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் சுமார் 5,000 வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்களைச் சர்வதேச நிலவு ஆராய்ச்சி நிலையத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளது.