நீட் முதுகலை மற்றும் நீட் இளங்கலைக் கல்விச் சேர்க்கை
January 9 , 2022 1442 days 638 0
பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% என்று ஜூலை 29, 2021 அன்று வெளியிடப்பட்ட அரசு அறிவிப்பின் அடிப்படையில் நீட் சேர்க்கைக்கான கலந்தாய்வுகளைத் தொடர்வதற்கு அனுமதி வழங்கிட வேண்டி உச்சநீதி மன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளது.
D.Y. சந்திரசூட் மற்றும் A.S. போபண்ணா ஆகிய நீதிபதிகள் அடங்கிய ஒரு அமர்வானது, தற்போதையச் சேர்க்கைப் பதிவிற்காக வேண்டி பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு விதிக்கப்பட்ட ரூ. 8 லட்சம் என்ற வரம்பினைப் பின்பற்றுமாறு அஜய் பூஷன் பாண்டே குழு அளித்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டது.