இந்தியாவின் நேரடி வரி நெகிழ்வுத் தன்மையானது தொடர்ந்து மூன்றாவது நிதியாண்டாக 1-க்கு மேல் உயர்ந்து, 2024–25 ஆம் ஆண்டில் 1.39 ஐ எட்டியுள்ளது.
நேரடி வரி நெகிழ்வுத்தன்மை என்பது நேரடி வரி வருவாய் வளர்ச்சியை, பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியுடன் ஒப்பிடுகிறது.
இந்த விகிதம் 2022–23 ஆம் ஆண்டில் 1.27 ஆகவும், 2023–24 ஆம் ஆண்டில் 1.48 ஆகவும், 2024–25 ஆம் ஆண்டில் 1.39 ஆகவும் இருந்தது.
1-க்கு மேல் உள்ள நெகிழ்வுத்தன்மை மதிப்பு, பெயரளவு ஜிடிபியை விட நேரடி வரி வருவாய் வேகமாக வளர்ந்துள்ளது என்பதைக் குறிக்கிறது.
நேரடி வரிகளில் வருமான வரி, நிறுவன வரி மற்றும் பங்குகள் பரிவர்த்தனை வரி ஆகியவை அடங்கும், இவை மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (CBDT) நிர்வகிக்கப் படுகின்றன.
2025 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம், 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்திற்குப் பதிலாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வந்தது.