TNPSC Thervupettagam

பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரத்திற்கான இலக்கு விதிகள், 2025

January 24 , 2026 3 days 50 0
  • 2025 ஆம் ஆண்டு பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (GEI) இலக்கு (திருத்தம்) விதிகளின் கீழ் கட்டாய உமிழ்வு-தீவிரக் குறைப்பு இலக்குகளின் இரண்டாவது சுற்று குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • தொழில்துறைப் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைப்பதற்காக, 1986 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் இந்த விதிகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • அவை அக்டோபர் 09, 2025 அன்று அமலுக்கு வந்தன என்பதோடு மேலும் அவை இந்தியாவின் கார்பன் மதிப்பு வர்த்தகத் திட்டத்தை (CCTS) ஆதரிக்கின்றன.
  • பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்கள், பெட்ரோ வேதியியல், ஜவுளி மற்றும் இரண்டாம் நிலை அலுமினியத் துறைகள் ஆகியவை இரண்டாவது சுற்றில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
  • இந்த இலக்குகள் ஒரு அலகு உற்பத்திக்கு ஒரு டன் கார்பன் டை ஆக்சைடுக்குச் சமமான (tCOe) என அளவிடப்படும் உமிழ்வுத் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்டவை.
  • எரிசக்தி திறன் வாரியம் (BEE) கார்பன் மதிப்புகளை வழங்குகிறது என்பதோடு அதே நேரத்தில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) விதிகளின் இணக்கத்தை அமல்படுத்துகிறது.
  • இந்த விதிகள் 2023–24 ஆம் அடிப்படை ஆண்டுடன் ஒப்பிடும் போது 2026–27 ஆம் ஆண்டளவில் உமிழ்வு தீவிரத்தை சுமார் 3–7% குறைப்பதை நோக்கமாகக் கொண்டு உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்