TNPSC Thervupettagam

பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதியில் 27 சதவிதம் அதிகரிப்பு

April 28 , 2021 1551 days 671 0
  • 2020-21 ஆண்டில் ஏப்ரல் – பிப்ரவரி ஆகிய மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் உற்பத்தி 26.51% என்ற அளவிற்கு உயர்ந்து உள்ளது.
  • இக்காலகட்டத்தில் இவற்றின் ஏற்றுமதி ரூ.43,798 கோடி ஆகும்.
  • 2020-21 ஆம் ஆண்டில் பதப்படுத்தப்பட்ட காய்கறிகள் மற்றும் மது பானங்களின் ஏற்றுமதி 40% உயர்ந்துள்ளது.
  • 2021-22 ஆம் ஆண்டிலும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி உயரும் என வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (Agricultural and Processed Food Products Export Development Authority – APEDA) தெரிவித்துள்ளது.
  • மத்திய கிழக்கு நாடுகள், அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் காய்கறிகள், பருப்புகள் போன்றவற்றிற்கான தேவை அதிகரித்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்